பெங்களூரு: கேஆர் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமியா லேஅவுட்டில் நேற்று காலை 40 வயது (தாய்) பெண் தனது இளம் (வயது 17) மகனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது.
தகராறு காரணமாக டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், காவல் நிலையத்திற்கு சென்று அந்த இளைஞன், தனது தாயைக் கொன்றுவிட்டேன் என கூறி சரணடைந்தார். இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் முல்பாகலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!
நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல இருந்த அந்த இளைஞனை அவரது தாய் திட்டியுள்ளார். சம்பவம் நடந்த போது வீட்டில் நேத்ரா மற்றும் அவரது மகன் மட்டுமே இருந்துள்ளனர். இந்த சம்பவ நடந்த இடத்திற்கு ஒயிட்பீல்ட் துணை போலீஸ் கமிஷனர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இதனால், தாயை கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது, தாயார் தன்னை முறையாக பார்த்து கொள்ளவில்லை என்றும் சரியான உணவு தருவதில்லை எனவும் இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரிக்கு புறப்படும்போது தாய் திட்டியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…