உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு 2022ல் பெங்களூரு 146வது இடம்
ஐரோப்பியப் புலனாய்வுப் பிரிவு(EUI) சமீபத்தில் வாழ்வாதாரக் குறியீடு பட்டியல் 2022ஐ வெளியிட்டது. இதில் 173 நகரங்கள் அவற்றின் வாழ்வாதாரம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்தையும் அடிப்படையாகக்கொண்டு இந்த வாழ்வாதார குறியீடு 2022 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 100க்கு 54.4 மதிப்பெண்களுடன் பெங்களூரு 146வது இடத்தைப் பிடித்துள்ளது.இதில் டெல்லி, மும்பை,சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு இந்திய நகரங்களும் மோசமான மதிப்புகளை பெற்று 140,141,142 மற்றும் 143 இடங்களை பிடித்துள்ளன.