ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து… தலைமையிடம் இதுவா.? முக்கிய நபரிடம் NIA தீவிர விசாரணை.!

Rameshwaram Cafe Bomb blast

Rameshwaram Cafe : கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபேயில் நண்பகலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூரு உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின்னர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

Read More – தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை நீக்கியது SBI!

அதன் பிறகு, வெடிகுண்டு விபத்து, மர்ம நபர் வருகை, அடையாளம் தெரியாத சிசிடிவி காட்சிகள் என தீவிரவாத நடவடிக்கை போல தெரியவந்தவுடன், கடந்த 4ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வழக்கு விசாரணை மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பெயரில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெடிகுண்டு சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் விசரணையை தொடர்ந்த NIA, சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தனர். அதில், தொப்பி அணிந்த மர்ம நபர் பெங்களூரு அரசு பேருந்தில் வந்து இறங்கியது கண்டறியப்பட்டது. அதன் பிறகு, ஆய்வு செய்த பொது பல்லாரியில் இருந்து வால்வோ பேருந்து மூலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..!

இதனை தொடர்ந்து இந்த குற்ற சம்பவம் பல்லாரியை தலைமையிடமாக கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு விசாரணையை தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து,  கடந்த டிசம்பர் 18, 2023 அன்று பல்லாரியில் என்ஐஏ சோதனையில், கைது செய்யப்பட்ட மினாஜ் என்கிற எம்டி சுலைமான், ஷயன் ரஹ்மான் என்ற ஹுசைன், சையத் சமீர் மற்றும் அனஸ் இக்பால் ஷேக் ஆகியோரில் சுலைமானை விசாரணைக்கு எடுக்க NIA நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

2023 டிசம்பரில் கைது செய்யப்பட்ட பல்லாரியைச் சேர்ந்த துணி வியாபாரி முகமது சுலைமான் (வயது 26)  வரும் மார்ச் 9ஆம் தேதி (நாளை) வரையில் NIA அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!

தனியார் செய்தி நிறுவனமான டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில்,  புதியதாக கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பார்த்தல், சந்தேகப்படும் மர்ம நபர் பழுப்பு நிற தொப்பி, கருப்பு முதுகுப்பை, முழு கை சட்டை, கருப்பு கலர் போன்ற கால்சட்டை, காலணிகள், முகமூடி மற்றும் கண்ணாடியுடன் வெடிகுண்டு சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலை 11.43 மணிக்கு வந்து செல்வதைக் காட்டுகிறது.

சந்தேகப்படும் நபர் சட்டையை மாற்றி டி-சர்ட் அணிந்து முகமூடியின்றி பேருந்து நிலையத்தில் இருந்து வேறு பேருந்தில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் சந்தேகிக்கப்படும் நபர் பல முறை தனது சட்டையை மாற்றி அடையாளத்தை மறைக்க முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நபர் பல்லாரி பேருந்து நிலையத்தில் இருந்து வேறு எங்கு சென்றார் என்ற விவரமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்