பெங்களூருவில் பரபரப்பு..! இன்ஸ்பெக்டரை சுட்டு விட்டு ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்டர்.!

- பெங்களூருவில் பரத் (ரவுடி) தினேஷ் என்ற இன்ஸ்பெக்டரை விட்டு ஓட முயன்ற முயற்சி செய்தார் .
- இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார்.
பெங்களூரு சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் பெங்களூரு அழைத்து வந்தனர்.அப்போது பீனியா அருகே வந்தபோது , போலீசார் வந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த காரில் இருந்த மர்மநபர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனை பயன்படுத்தி பரத் தனது கூட்டாளிகளின் காரில் தப்பிச்சென்று விட்டார்.
தப்பி சென்ற பரத்தை யசருகட்டா மெயின் ரோட்டில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பரத் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் தினேஷ் பட்டீலை சுட்டார். இதனால் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையெடுத்து மற்ற போலீசாரை பரத்தும் , அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியாலும் சுட முயற்சி செய்து ஓட முயன்றனர்.
இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025