Cake city Bangaluru - Briyani [File Image ]
2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.
அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக மாநிலம் பெங்களூரு பெயரெடுத்துள்ளது. கேக் நகரம் பெங்களூருவில் இதுவரை 8.5 மில்லியன் (85 லட்சம்) கேக்குகள் ஆர்டர் செய்ப்பட்டுள்ளன. கேக் ஆர்டர் குவிந்து வருவதால் பல்வேறு புதிய கடைகள் பெங்களூருவில் திறக்கப்படுகின்றன.
சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….
பெங்களூருவில் தங்கி வேலை செய்து வரும் நாக்பூரை சேர்ந்த ஒரு நபர் ஒரு நாளில் மட்டும் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளாராம். பெங்களூருக்கு அடுத்ததாக சென்னை, டெல்லி, ஹைதிராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. அங்கு ஒரு நாளில் சுமார் 10 ஆயிரம் கேக்குகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.
அதே போல பிரியாணி ஆர்டர் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளன. ஆன்லைன் உணவு ஆர்டர்களில் என்றும் ராஜாவாக திகழ்கிறது பிரியாணி. தொடர்ந்து 8வது ஆண்டாக அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு வகையில் முன்னணியில் இருந்து வருகிறது “ஆல் டைம் பேவரைட்” பிரியாணி. இந்தியாவில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் ஆகிறதாம். 2 வினாடிக்கு 5 பிரியாணி ஆர்டர் ஆகிறதாம். 6 சிக்கன் பிரியாணிக்கு 1 காய்கறி பிரியாணி என்ற வீதத்தில் ஆர்டர் ஆகிறதாம். அதில் ஹைதராபாத்தில் இருந்து அதிக ஆர்டர் செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 250 க்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர்கள் செய்யப்படுகின்றன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…