இந்தியாவின் ‘கேக் நகரம்’ எது தெரியுமா.? 2 வினாடிக்கு 5 பிரியாணிகள் ஆர்டர்.! 

Cake city Bangaluru - Briyani

2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

கேக் நகரம் : 

அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக மாநிலம் பெங்களூரு பெயரெடுத்துள்ளது. கேக் நகரம் பெங்களூருவில் இதுவரை 8.5 மில்லியன் (85 லட்சம்) கேக்குகள் ஆர்டர் செய்ப்பட்டுள்ளன.  கேக் ஆர்டர் குவிந்து வருவதால் பல்வேறு புதிய கடைகள் பெங்களூருவில் திறக்கப்படுகின்றன.

சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….

சென்னை :

பெங்களூருவில் தங்கி வேலை செய்து வரும் நாக்பூரை சேர்ந்த ஒரு நபர் ஒரு நாளில் மட்டும் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளாராம்.  பெங்களூருக்கு அடுத்ததாக சென்னை, டெல்லி, ஹைதிராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. அங்கு ஒரு நாளில் சுமார் 10 ஆயிரம் கேக்குகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

பிரியாணி :

அதே போல பிரியாணி ஆர்டர் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளன. ஆன்லைன் உணவு ஆர்டர்களில் என்றும் ராஜாவாக திகழ்கிறது பிரியாணி.  தொடர்ந்து 8வது ஆண்டாக அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு வகையில் முன்னணியில் இருந்து வருகிறது “ஆல் டைம் பேவரைட்” பிரியாணி.  இந்தியாவில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் ஆகிறதாம். 2 வினாடிக்கு 5 பிரியாணி ஆர்டர் ஆகிறதாம். 6 சிக்கன் பிரியாணிக்கு 1 காய்கறி பிரியாணி என்ற வீதத்தில் ஆர்டர் ஆகிறதாம். அதில் ஹைதராபாத்தில் இருந்து அதிக ஆர்டர் செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 250 க்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர்கள் செய்யப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்