Bengaluru Rain : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு,மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அடுத்த சில நாட்களுக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை ஐடி தலைநகரான பெங்களூருவில் கனமழை பெய்தது, நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், கனமழையின் அறிகுறியாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பெய்த கனமழையால் நகரின் பல முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி சில பகுதிகளில் உள்கட்டமைப்புகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் வாகன ஓட்டிகள் சிலர் காயமடைந்தனர்.
#Bengalururains
visual 04 JC Road pic.twitter.com/3d6RudwhSX— Sumit (@SumitHansd) October 19, 2022
ட்விட்டர் பயனர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய அடித்தளத்தின் வீடியோவைப் பகிர்ந்து, “இது ஒரு நதி அல்ல, இது எனது கட்டிடத்தின் அடித்தளம் என்று பதிவிட்டுள்ளார்.
This is’nt a river,its my building’s basement.#bbmp #bengalururains pic.twitter.com/NFU2wmr5o8
— Jeeshan Kohli (@JeeshanKohli) October 20, 2022