2500 ரூபாய்க்கு மின்சாரம் தேவையில்லாத வெண்டிலேட்டர்.! அசத்தும் பெங்களூரு நிறுவனம்.!
பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவைப்படாத எலெக்க்ரானிக் சாதனம் இல்லாத தேவையான அளவு ஆக்சிஜன் கொடுக்கும் வென்டிலேட்டரை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் பாதிப்போடு மூச்சு திணறல் அதிகமாக ஏற்படும். அதனால், கொரோனா சிகிச்சையளிக்க வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி ) அத்தியாவசியமாகி உள்ளது.
இந்த வெண்டிலேட்டர் செயல்பட மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவையின்றி இயங்கும் வெண்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளது. இதனை இயக்க எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏதுமின்றி உரிய அழுத்தத்தில் ஆக்சிஜன் கொடுக்கும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.