பெங்களூரு கட்டிடம் விபத்து.. மேலும் தமிழர் உயிரிழப்பு.! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!
இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![Bengaluru Hennur collapsed](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/10/Bengaluru-Hennur-collapsed.webp)
பெங்களூரு : கனமழை எதிரொலியாக பாபுசபால்யாவில் கட்டுமானத்தில் இருந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது.
இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இந்த கட்டட விபத்தில் மணிகண்டன் மற்றும் சத்யராஜு ஆகியோர் உயிரிழந்தனர். இப்பொது, ஏழுமலை என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் தமிழர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்து.
முன்னதாக, இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2லட்சம் நிவாரணத் தொகை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையில், ரூ.2லட்சமும், காயம் கண்டவருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.