பெங்களூரு ரயில் நிலையத்தில் புகுந்த தமிழ் மொழி கொதித்தெழுந்த கன்னடர்கள்!
பெங்களூருவில் உள்ள பிரதான ரயில் நிலையமான கிராந்தி வீரா சங்கொலி ராயண்ணா இடம் பற்றிய தகவலானது, கூகுள் மேப்பில் காட்டுகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதன் இடம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக கூகுள் மேப்பில், அந்தந்த மாநிலங்களின் முகவரியை தேடுகையில் அந்த மாநிலத்தின் பிரதான மொழி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் கூகுள் முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலைய பெயர் தமிழில் இருந்தததால் கன்னட நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, டிவிட்டரில் கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்களை தெரிவிக்கையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து அந்த ரயில் நிலையத்தின் முகவரி கூகுளில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது.