‘இனி எங்களால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது!’ – தூக்கில் தொங்கிய காதலர்களின் கடைசி பேச்சு!

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த அபஜித் என்கிற 25 வயது இளைஞரும், அதே கம்பெனியில் வேலை செய்துவந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீலக்ஷ்மி என்கிற 21 வயது பெண்ணும் நட்பாக பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இருவீட்டாரிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.
இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கள் குடும்பத்தாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஸ்ரீலக்ஸ்மி அவரது தாய்மாமாவிற்கு போன் செய்து, ‘இனி எங்களால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது’ என கூறிவிட்டு, போனை ஸ்விச்ச் ஆப் செய்துள்ளனர். இதனை அடுத்து போலீசாரிடம் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஓர் அடர் வனத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலம் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் தற்கொலை செய்துகொண்டு 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. பின்னர் இந்த உடலை சோதித்து இவர்கள் அபஜித் மற்றும் ஸ்ரீலக்ஷ்மி என கண்டறிந்தனர். இந்த தற்கொலை குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025