வீடுகளை விட்டு வெளியே வாருங்கள்! வைரஸை பரப்புவோம்! – சர்ச்சை கருத்தை பதிவிட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்!
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக்க பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியர் தனது இணையதள பக்கத்தில், கொரோனா குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். தும்மும்போது கைகுட்டையின்றி தும்முவோம். வைரஸை பரப்புவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது.
இதனை அடுத்து, அந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.