இணைய சேவைக்கு தடை…சென்னை TO ஒடிஷா- மே.வங்கம் செல்லும் ரயில்கள் ரத்து..!கலவர பூமியான மே.வங்கம்..!
- குடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டங்களால் சென்னையில் இருந்து ஒடிஷா, மே.வங்கம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- குவஹாத்தியில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இதனால் மேற்கு வங்கமே கலவர பூமியாக காட்சியளிக்கின்றது.இதனால் அம்மாநிலத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி மக்கள் அமைதி காக்கும்படியாகவும் , வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில் நேற்று அம்மாநிலத்தில் இரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.இதன் எதிரொலியாக ஒடிஷா வழியாக செல்லும் பல ரயில் சேவைகளும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் சென்னையில் இருந்து ஒடிஷா, மே.வங்கம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விஜயவாடா வரை மட்டுமே இயக்கப்படுகிறது. குவஹாத்தியில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.