யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் !
மன அமைதி:
இந்த நவீன உலக காலகட்டத்தில் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாக தேவைப்படுவது மன அமைதி. நம் வாழ்வில் இதற்கு முன் நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அதை யோகா செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும்.
யோகா செய்வதன் மூலம் நம் எதிர்பாராத அளவிற்கு நமது மன அமைதியும் , நிம்மதியும் கிடைக்கும். இந்த மனநிலையில் எடுக்கும் நமது முடிவுகள் அனைத்தும் தெளிவாகவும், சரியானதாகவும் இருக்கும்.
மன அழுத்தம்:
நம்மை சுற்றி இருக்கும் சில நபர்கள் எப்போதுமே மனநிலை சரியில்லை என சொல்லிக் கேட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருவார்கள். சிலர் மன அழுத்ததை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு மீண்டும் மன அழுத்தத்தை அதிகரித்து கொள்வார்கள்.
இந்நிலையில் மன அழுத்ததை யோகா செய்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். நம் யோக செய்யும் போது நம் மூளையில் gamma-aminobutyric acid (GABA) என்ற ரசாயனம் அதிகரிப்பதால் நம்முடைய மன அழுத்தம் குறைகிறது.
மனதை ஒருநிலைப்படுத்த:
உடல் சார்ந்த துறையில் இருந்தாலும் சரி அதாவது கூடைப்பந்து, நீச்சல் ,கால்பந்து போன்ற வீரராகவும் இருந்தாலும்,எழுத்தாளன் போன்ற உளவியல் துறையில் இருந்தாலும் சரி யோகா உங்களுடைய சிறந்த நண்பன்.
யோக செய்வதன் மூலம் உங்கள் மனதிடம் மற்றும் உடல் வலுவை அதிகரிக்கிறது.மேலும் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களது துறையில் சாதிக்க வைக்க யோகா உதவுகிறது!
ஆழ்ந்த தூக்கம்:
இன்று நம்மில் பலருக்கும் ஒரு பிரச்னை இருப்பது தூக்கமின்மை. நம் தினமும் வேலை சம்மந்தமாக சுற்றி திரிந்து பிறகு நம் நிம்மதியாக தூங்க நேரமில்லை.காரணம் இரவில் பதற்றத்துடன் எழுவது, கனவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் என பல காரணங்கள் உள்ளது.
யோகா செய்வதன் மூலம் நமது மனநிலை நன்றாக இருக்கும். நமது மனநிலை நன்றாக இருக்கும் போது மட்டுமே நமக்கு நிம்மதியான தூக்கம் வரும்.