பிச்சை எடுத்த தொகையை கோவில்கலுக்கு நன்கொடையாக அளித்த பிச்சைக்காரர்.. குவியும் பாராட்டுக்கள்..!
ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர், யாதி ரெட்டி. கூலி வேலை பார்த்து வந்த இவர், வயது முதிவு காரணமாக அங்குள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார். 71 வயதாகும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இவர் பிச்சை எடுத்து வந்த பணத்தில் சுமார் 1 லட்ச ரூபாயை சாய் பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருவதாகவும், அந்த தொகைகளை கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கிவருதாகவும் கூறினார்.
இதுவரை பல கோவில்களுக்கு நன்கொடை வழங்கியதாகவும், மொத்தமாக 8 லட்ச ரூபாய் வரை வழங்கியதாகவும் கூறினார். இவரின் இந்த செயல், பலரிடையே பாராட்டுகளை பெற்ற வருகிறது.