6 மாத குழந்தையின் உயிரை பறித்த வண்டு..!

Default Image

கேரள மாநிலம், திருவனந்தபுரம், காசர்கோடு அடுத்து சென்னிக்கரையை சேர்ந்தவர் சத்தியேந்திரன். இவருக்கு மனைவியும் 6 மாதத்தில் அன்வேத் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் 10-ஆம் தேதி குழந்தை அன்வேத் வீட்டில் தவழ்ந்து தவழ்ந்து விளையாடி வந்துள்ளது. திடீரென அப்போது மயக்கம் அடைந்து குழந்தை கீழே விழுந்தது. இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை காசர்கோடு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இறுதியாக குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. பிரேத பரிசோதனையில், குழந்தையின் மூச்சுக்குழாயில் ஒரு வண்டு ஒன்று சிக்கியிருந்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
adhik ravichandran
dhoni Riyan Parag
Myanmar Earthquake
pm modi MK stalin
CSKvsRR