அழகான காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்து கொள்ளலாம் – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இனி அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசி இருக்கிறார்.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சைனி என்பவர் தம் கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து சட்டம் 360 ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இனி அங்குள்ள அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று கூறி இருக்கிறார். மேலும், பாஜக இளைஞர்கள் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றும் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம் என்றும் பேசியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ பரவி சர்ச்சைக்கு உள்ளாகியது. இதுகுறித்து அவர் கூறுகையில், தாம் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.