தைரியத்தின் கலங்கரை விளக்கம்.. சுதந்திர போராட்டத்தின் அடையாளம்! பகத் சிங் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

bhagat sigh

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் அடையாளமாக விளங்கும் தியாகி பகத் சிங்கின் பிறந்தநாள் இன்று (செப்.28) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. செப்.28ம் தேதி 1907ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பங்கா என்ற சிறிய நகரத்தில் பிறந்த பகத் சிங். சுதந்திர போராட்டத்திற்கான அடையாளத்தை வரலாற்றில் அழிக்க முடியாத வகையில் உருவாக்கி சென்றுள்ளார். அவரது குடும்பமும் விடுதலை போராட்டம் மீது ஈடுபாடு கொண்டதாக விளங்கியது.

அவரது தந்தை, கிஷன் சிங் சந்து, மற்றும் மாமா, அஜித் சிங், இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள். இதனால், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் அர்ப்பணிப்பு, போராட்ட குணம், தைரியம், புரட்சிகர சிந்தனைகள் என உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மனதில் ஆணித்தனமாக பதிந்தது. இதில், குறிப்பாக  ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத் சிங்கை விடுதலை போராட்டத்தை நோக்கி தள்ளியது.

அப்போது, நடந்த துப்பாக்கிசூட்டில் பகத் சிங் மாரில் ஏறிய குண்டு இந்தியர்களின் மனதில் அழியாத நினைவாக உள்ளது. பின்னர் பகத்சிங், தனது சக புரட்சியாளர்களுடன் சேர்ந்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தைரியமான பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த சமயத்தில், 1929ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் மறக்க முடியதாக வரலாறாக இருக்கிறது. பின்னர் லாகூர் சதி வழக்கில் பகத் சிங் கைது செய்யப்பட்டது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மார்ச் 23, 1931-இல், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருடன் தூக்கிலிடப்பட்டார். எனவே, பகத்சிங் உள்ளிட்டோரின் தியாகம், சுதந்திரத்திற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த ஊக்கப்படுத்தியது. இதனால் அவரது வரலாறு இந்தியர்கள் மனதில் எப்போதும் அளிக்க முடியாதவையாக உள்ளது. இந்த நிலையில், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாள் இன்று நினைவு கூறப்படுகிறது. அந்தவகையில், பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்தநாளில் நினைவு கூருகிறோம்.இந்தியாவின் நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இடைவிடாத போராட்டத்தின் அடையாளம் பகத் சிங்.  இந்தியாவின் சுதந்திரத்திற்கான அவரது தியாகமும், தளராத அர்ப்பணிப்பும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, அவர் என்றென்றும் இந்தியாவின் நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இடைவிடாத போராட்டத்தின் அடையாளமாக இருப்பார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்