தவறாமல் இந்த புத்தகத்தை படியுங்கள்! பிரதமர் மோடி ட்வீட்!
விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விவரிக்கும் கிராபிக்ஸ் மற்றும் தகவல்கள் அடங்கிய புத்தகமாக வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், கடந்த 26 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விவரிக்கும் கிராபிக்ஸ் மற்றும் தகவல்கள் அடங்கிய புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதை நமோ ஆப் தன்னார்வ தொகுதியின், உங்கள் குரல் பிரிவில் சென்று படித்து வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.