லடாக்கில் எல்லை பிரச்சனை தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா சில இடங்களில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கி விட்டது. ஆனால், பாங்காங் திசோ, கோக்ரா பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்காமல் உள்ளது.
சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எப்போது அழைத்தாலும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது என்னால் எதையும் கூற முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி ராஜ்நாத் சிங் கூறியதாக என கூறப்படுகிறது. முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய இந்திய முயன்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…