எப்போது அழைத்தாலும் தயாராக இருக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்.!

Default Image

லடாக்கில் எல்லை பிரச்சனை தொடர்பாக பல முறை  பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா சில இடங்களில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கி விட்டது. ஆனால், பாங்காங்  திசோ, கோக்ரா பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்காமல் உள்ளது.

சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எப்போது அழைத்தாலும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது என்னால் எதையும் கூற முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி ராஜ்நாத் சிங் கூறியதாக என கூறப்படுகிறது. முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய இந்திய முயன்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்