தயார் நிலையில் வைத்திருங்கள் -அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸால் இந்தியாவில் 440 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.அதாவது, மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள் .கொரோனா வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.