பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை வடிவமைத்துள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்தது.
அதன்படி,கடந்த மே 18 ஆம் தேதியிலிருந்து,கூகுள் பிளே-ஸ்டோரில்,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா செயலிக்கான முன்பதிவும் தொடங்கி,20 மில்லியன் பதிவுகளை பெற்றது.ஆனால்,கேமின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
இதன்காரணமாக,இந்தியாவில் பப்ஜி ரசிகர்கள்,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் வெளியீட்டு தேதி குறித்து,மிகவும் உற்சாகமாக மற்றும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.இதனால்,அதன் டெவலப்பர்கள்,ஒரு புதிய டீஸர் வெளியிட்டு பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் வெளியீட்டு தேதிகளை மறைமுகமாக வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது,ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என புதிய தகவல் வெளியாகியது. இந்நிலையில், பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,ஆன்டிராய்டு வெர்சனில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேமினை என்ற லிங்கில் சென்று அதிகாரப்பூர்வமாக பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதனால்,பப்ஜி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…