ஜனவரி முதல் ஆந்திராவில் புதிய பேட்டரி பஸ்கள் !
ஆந்திராவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் கோல்ட் ஸ்டோன் நிறுவனத்தின் பேட்டரி பஸ் கொண்டு வரப்பட்டது. இந்த பஸ் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விஜயவாடா, கன்னவரம் விமான நிலையத்திலிருந்து அமராவதி, வெலகம்புடி வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த புதிய பேட்டரி பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. இந்த பஸ் 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்புள்ள இந்த பேருந்துக்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் மானியம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com