#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..!
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடகா மாநிலம் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்ததை தொடர்ந்து, நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் தவார் சந்த்யை சந்தித்து வழங்கியிருந்தார்.
எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்து முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, சி.டி.ரவி மற்றும் பிஎஸ் சந்தோஷ் உள்ளிட்டோரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று இரவு பெங்களூரில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் எடியூரப்பா, சட்டசபை குழுத்தலைவராக பசவராஜ் பொம்மை பெயரை அறிவித்தார். அதாவது புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் ஆவார். இந்த அறிவிப்பை மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை கர்நாடக பாஜகவின் புதிய முதல்வராக நாளை பிற்பகல் 3 மணி அளவில் பதவி ஏற்கவுள்ளார்.