நாட்டில் உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் கட்டியெழுப்ப நீதித்துறை செயல்பட வேண்டும் -பிரதமர் மோடி பேச்சு

குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் குஜராத் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக தபால் தலை ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது.அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பை நமது நீதித்துறை நிறைவேற்றியுள்ளது என்று இன்று ஒவ்வொரு குடிமகனும் முழுமையான திருப்தியுடன் சொல்ல முடியும்.நாட்டில் உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் கட்டியெழுப்ப பார் மற்றும் நீதித்துறை செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024