பப்ஜி, பேஸ்புக் உள்பட 89 செயலிகளை வீரர்கள் பயன்படுத்த தடை.! இந்திய ராணுவம் அதிரடி.!
கடந்த மாதம் 15-ம் தேதி லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் இருந்து உயிரிழப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இரு நாட்டு படைகளும் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய- சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின் வாங்கி உள்ளன.
இந்நிலையில், இராணுவ வீரர்கள் பேஸ்புக், பப்ஜி உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு இந்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.