திட்டமிட்டபடி டிச.16, 17-ல் வங்கிகள் வேலை நிறுத்தம்!

Default Image

தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.

2021-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதியளிக்கவில்லை என்றும் மத்திய அரசு உறுதி அளிக்காததால் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்