மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகள் சனிக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி.!

Default Image

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து பல இடங்களில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேற்கு வங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளில் வங்கி கிளைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்ந நிலையில் தற்போது அரசு விதித்துள்ள பல்வேறு தளர்வுகளையும், தற்போதைய கொரோனா பாதிப்பு நிலைமையும் கருத்தில் கொண்டு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை தவிர அனைத்து வங்கி கிளைகளும் சனிக்கிழமைகளில் வேலை செய்ய அனுமதித்து மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிக்காட்டுதல்களின் படி, நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டதோடு, செப்டம்பர் 7,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை மட்டும் 2,984 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,039ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3335 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு தற்போது மீட்பு விகிதம் 84.02 சதவீதமாகவும், 55 பேர் கொரோனாவால் உயிரழந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 3,394 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Govt Employees - Protest
Aadhaar - Rahul Gandhi
NASA astronaut Sunita Williams return
Sunita Williams -Crew 9
ab de villiers and virat kohli
sekar babu tvk vijay