அடுத்த மாதம் இந்த நாட்களில் வங்கிகள் மூடல்.. மாநில வாரியான பட்டியல்.!
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் மட்டுமல்லாமல் பல மத விழாக்கள் உள்ளன. அவை நீங்கள் எந்த மாநிலத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி விடுமுறையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
பொதுவாக இரண்டாவது, நான்காவது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தவிர, வங்கிகள் மற்ற நாட்களிலும் செயல்படுகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி, பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அதாவது அனைத்து வங்கிகளுக்கும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத், குரு நானக் ஜெயந்தி, புனித வெள்ளி போன்ற பண்டிகைகளும் விடுமுறைகள் அளிக்கப்படுகின்றனர்.
சில விடுமுறைகள் மாநிலத்திற்கு, மாநிலம் மாறுபடும் உதாரணமாக, நாராயண குரு ஜெயந்தி, மகாலயா போன்ற நாள்களில் சில நகரங்களில் வங்கிகள் மூடப்படும். இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பரில் சில மத விழாக்கள் வருவதால் சில மாநிலங்களில் உள்ள நகரங்களில் இயங்கி வரும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுவிடுமுறை இல்லாமல் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழாவிற்கு திருவனந்தபுரம், கொச்சி போன்ற நகரங்களில் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாலயா விழாவிற்கு 17-ம் தேதி கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.