வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்
வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம்.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், சிறு குறு தொழில் செய்யும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டுக்காகவே அவசர கால கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதாகவும், அத்திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்க மறுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம் என்றும், நிதியமைச்சர் என்ற முறையில், தாமே அதற்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார்.