வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைப்பதற்கான திருத்தம் ஆகும்.அதாவது,2020-ஆம் ஆண்டு கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தை திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டமானது தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது.
இந்த மசோதாவை தாக்கல் செய்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…