பீகார் மாநிலம் முசாபர்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார்
வங்கிக்குள் நுழைந்து ஆறு கொள்ளையர்கள் வந்த வேகத்தில் 8 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று வங்கியின் பணிகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது தலையில் தலைக்கவசம் அணிந்த படி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், அதி விரைவாக செயல்பட்டு, கவுண்டரில் இருந்து எட்டு லட்ச ரூபாய் பணத்தை அசால்டாக கொள்ளையடித்து சென்றனர்.
உள்ளே வந்த உடனே, அவர்கள் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் வங்கி ஊழியர்களும் கட்டுப்படுத்தினர். மேலும் நுழையும் முன்னே, அங்குள்ள காவலாளிகளின் துப்பாக்கியை பிடுங்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவினை வைத்து இந்தத் 6 திருடர்கள் யார் என தனிப்படை அமைத்து கண்டுபிடித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…