மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்கவும், கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கான வங்கிகள் திருத்தச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள், 58 பன்மாநில கூட்டுறவு வங்கிகள் தற்போடு வரை செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிலோ அல்லது அதன் நேரடிக் கட்டுப்பாட்டிலோ இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகின்ற பஞ்சாப் – மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டில் பல ஆயிரம் கோடிக்கு மேலாக முறைகேடு நடந்தது.
இந்நிலையில் இதன் காரணமாக பணத்தை இழந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் என்று கசிந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் அரசின் இந்த முடிவால், மக்களின் முதலீட்டு பணத்துக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இதற்கான அவசரச் சட்டம் விரைவில் வெளியிடப்படும், என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருகின்ற அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போஅது ஒப்புதல் அளித்து விட்டதாகவும் இனி வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என்றே அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஒப்புதலை அடுத்து இன்று முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் வந்து விட்டது.இனி ரிசர்வ் வங்கியின் நேரடிப் பார்வையில் இந்த வங்கிகள் செயல்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…