வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.. பட்ஜெட் நாளன்று எதிர்ப்பு தெரிவிக்க வங்கி ஊழியர்கள் முடிவு..
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.
- மத்திய அரசுக்கு தங்கள் எதிப்பை பலமாக காட்ட முடிவு.
வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த 2020-2021-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 31-லும், பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், அந்த இரு நாட்களில் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்க்கு முன்னர், வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. 12.25% ஊதிய உயர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை அடுத்தே தற்போது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்ததிலும் தங்களுக்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் மீண்டும் மார்ச் மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.