வரும் வாரத்தில் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை.! எத்தனை நாட்கள் தெரியுமா?
மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன.
மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன. அதன்படி, மார்ச் 27 கடைசி சனிக்கிழமை, மார்ச் 28 ஞாயிறு, மார்ச் 29 ஹோலி, மார்ச் 31 நிதி ஆண்டின் கடைசி நாள், ஏப்ரல் 1 வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளது.
இதனிடையே, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து வங்கி சேவைகள் தடைப்பட்டது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சேவை தடைபடலாம் என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.