இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம்..!

வங்கி இணைப்பை கண்டித்து இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி இணைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வருடத்திற்கு சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை நிறுத்துகிறது என வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் கூறியபடி இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 30,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால் இன்று வங்கி சேவை பாதிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024