நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் …!

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025