மேற்கு வங்கத்தில் இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பன்ஸ்கட்டா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. படையின் 107 வது பட்டாலியனின் வீரர்கள் எல்லைப் பகுதியில் இருந்தனர். அப்போது 12 கடத்தல்காரர்கள் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மூங்கில் குச்சிகள் மற்றும் ‘டா’ என்று அழைக்கப்படும் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர் என பாதுகாப்பு படை வீரர் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தனர், என்றார். வீரர்கள் தற்காப்புக்காக சுட்டனர். பின்னர், அவர்கள் எல்லையைத் தாண்டி பங்களாதேஷ் நோக்கி ஓடினர் என்று அந்த அதிகாரி கூறினார். சம்பவ இடத்திலிருந்து எட்டு கிலோகிராம் கஞ்சா அடங்கிய ஒரு பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர் காயமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…