இந்தியாவை முந்தும் வங்கம்..! பலே 6 ஆண்டு அருமை! கைத்தட்டி ராகுல் ட்வீட் !

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை நெருங்கி வந்துவிட்டது என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
சர்வதேச நிதியமான ஐஎம்எப் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை இன்று வெளியிட்டது. அவ்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் பக்கத்து நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கி உள்ளதாக தெரிவித்தது.
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -10.3% குறைய வாய்ப்பு உள்ளதாகவும்தெரிவித்தது.இந்நிலையில்சர்வதேச நிதியம் வெளியிட்ட இவ்வறிக்கையை மேற்கோள்காட்டி அதன் வரைபடத்தை எம்.பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது என்று தெரிவித்து கிண்டல் செய்யும் விதமாக கைதட்டும் படங்களையும் ராகுல் காந்தி பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்து உள்ளார்.
Solid achievement of 6 years of BJP’s hate-filled cultural nationalism:
Bangladesh set to overtake India.
???????????? pic.twitter.com/waOdsLNUVg
— Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025