சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பள்ளி மாணவருக்கு சல்யூட் அடித்த பெங்களூர் காவல் ஆணையர்!
சமூக வலைத்தளங்களில் பெங்களூரில் மாநகர காவல் ஆணையர் பள்ளி மாணவருக்கு சல்யூட் அடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
பெங்களூர் காவல் ஆணையரான டி.சுனில்குமார், அங்குள்ள மல்லையா மருத்துவமனையிலிருந்து சக போலீசாருடன் வெளிவருகிறார். அப்போது பள்ளிச்சீருடையில் எதிர்படும் மாணவன் ஒருவன், அவரைப் பார்த்து சல்யூட் அடிக்க, காவல் ஆணையரும் மிடுக்காக சல்யூட் வைக்கிறார். இந்தக் காட்சிகள் பெங்களூர் போலீசாரின் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டன. சிறுவன் என்றும் பாராமல், மாணவன் அளித்த மரியாதைக்கு பதில் மரியாதை வைத்த காவல் ஆணையர் சுனில் குமாருக்கு வாழ்த்துக்கள், குவிவதோடு இந்தக் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
https://youtu.be/WwzX-hGpmZc
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.