பெங்களூரில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு..!
பெங்களூரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துளளது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 94 ஆக உயர்ந்துள்ளளது.
இந்நிலையில், பெங்களூரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு புதிதாய் 49 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை 191 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 52 சதவீதமாக இருக்கிறது. குணமடைந்தோரின் விகிதம் 48 சதவிதத்தை நெருங்கவுள்ளது. மேலும், 225 பகுதிகள் இந்நிலையில், கட்டுப்படுத்தபட்ட நிலையில், அது நாளடைவில் 142 ஆக குறைந்தது. இந்நிலையில், கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை, 142-ல் இருந்து தற்பொழுது 191 ஆக உயர்ந்தது.