பெங்களூரு TO சோலாப்பூர் “RORO” ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!

Default Image

பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு “RORO” ரெயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று காலை காணொளி காட்சி மூலம் பெங்களூரிலிருந்து சோலாப்பூருக்கு செல்லும் “ரோல் ஆன் ரோல் ஆஃப்” என்ற (ரோரோ) ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த ரயில் தர்மவரம், குண்டகல், ரைச்சூர் மற்றும் வாடி வழியாக 682 கி.மீ தூரத்தை மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே சென்று அடைகிறது.

ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு மற்றும் சோலாப்பூர் இடையே சரக்கு லாரிகளின் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்த பின்னர் ரோரோ ரயில்களின் சோதனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டதாக ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.

இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. தாற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமில்லாமல் ரோரோ ரயில்களை இயக்குவதன் மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய மற்றும் ஏற்றுமதி செய்ய உதவும்.

இந்நிலையில் ரோரோ ரயில்களை அறிமுகப்படுத்துவது சாலை போக்குவரத்து மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், “ரோரோ” ரயில்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்வது ஆகும். அந்தந்த லாரிகள் பயணிக்க வேண்டிய குறிப்பிட்ட ரெயில் நிலையம் வந்த உடன் லாரிகள் இறக்கி விடப்படுகிறது.

மேலும், இந்த புதிய ரயில் சேவை பெங்களூரிலிருந்து தொழில்துறை மற்றும் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், மகாராஷ்டிராவிலிருந்து வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் பிற பொருட்களைப் பெறவும் உதவும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்