பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு.
கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பிய நிலையில், திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு மீது சரமாரி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சீனிவாசமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நின்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
மேலும், சீனிவாசமூர்த்தியின் வீட்டில் தாக்கத்தால் நடத்திய அதே குழுவினரால், டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து கூறுகையில், பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும். அதற்காக வன்முறையாட்டம் ஒரு தீர்வு அல்ல. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…