பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது.
டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
வன்முறைக்கு அடுத்த நாள்(அதாவது நேற்று முன்தினம் ) 145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் மேலும் 60 பேரை கைது செய்துள்ளனர். இதனால், மொத்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை 206 ஆக உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது.
இதில் காங்கிரஸ் கார்ப்பரேட்டர் இர்ஷாத் பேகமின் கணவர் கலீம் பாஷாவும் உள்ளார் என்று பெங்களூரு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…