பெங்களூர் கலவரம்.. இதுவரை மொத்தம் 206 பேர் கைது..!

Default Image

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது.

டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

வன்முறைக்கு அடுத்த நாள்(அதாவது நேற்று முன்தினம் )  145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை  நடந்த  வன்முறை தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் மேலும் 60 பேரை கைது செய்துள்ளனர்.  இதனால்,  மொத்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை 206 ஆக உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது.

இதில் காங்கிரஸ் கார்ப்பரேட்டர் இர்ஷாத் பேகமின் கணவர் கலீம் பாஷாவும் உள்ளார் என்று பெங்களூரு இணை போலீஸ் கமிஷனர்  சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்