பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது.
டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். கலவரக்காரர்கள் தாக்கியதில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, சர்ச்சைக்கு காரணமாக இருந்த நவீன் கைதுசெய்யப்பட்டார். கலவரத்தில் ஈடுபட்டதாக 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…