கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீட்டருகே, கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் நா வெடித்த கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தற்போது என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடகாவை சேர்ந்த, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தி யின் உறவினர் நவீன் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தன் சமூக வலைதல பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அது, மத ரீதியாக, ஒரு பிரிவினரை புண்படுத்தியதாக கூறப்பட்டது. இதைஅடுத்து, அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீடு அமைந்துள்ள, பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. டி.ஜே., ஹள்ளி மற்றும் கே.ஜி., ஹள்ளி காவல்நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு பேர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட, 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் உட்பட, பல்வேறு பிரிவுகளில், இரண்டு வழக்குகளை, காவலர்கள் பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைகள், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் வசம், நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ளது. இதற்காக, ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…