பெங்களூரு கலவரம்… என்.ஐ.ஏ அதிரடி சோதனை…. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…

என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கடந்த மாதம் நடந்த பெங்களூரு கலவரம் தொடர்பாக 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, ஏர்கன் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் புலிகேசி நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் ஒரு சமுக சமய தலைவர் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வீடு சூறையாடப்பட்டது. மேலும் அப்பகுதி காவல் நிலையத்தையும் அந்த கலவர கும்பல் அடித்து உதைத்தது. இதனை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முன்னின்று நடத்தியதாக பா.ஜ.க., குற்றம்சாட்டியது. இந்த கலவரத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை செவ்வாயன்று தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு எடுத்தது. இன்று அவ்வழக்கு தொடர்பாக 30 இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்த சோதனைகளின் போது ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ மற்றும் எஸ்.எப்.ஐ., தொடர்புடைய குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கலவரத்திற்கு சதி செய்ததாக வங்கி வசூல் பணியாளரான சையது சாதிக் அலி என்பவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கலவரம் தொடர்பான எஸ்.டி.பி.ஐ., கட்சி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025