பெங்களூர் – மைசூர் எக்ஸ்பிரஸ்வே..! இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..!
மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் வரை 118 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் வரை 118 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை ரூ.8,480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெடுஞ்சாலை பாரத் மாலா பிரயோஜன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்த புதிய நெடுஞ்சாலை மூலமாக 3 மணி நேர பயணம் 75 நிமிடமாக குறையும் என கூறப்படுகிறது. 6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதல் சர்வீஸ் சாலைகள் இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நெடுஞ்சாலை 11 மேம்பாலங்களையும், 64 சுரங்க வழிப்பாதைளையும், ஐந்து புறவழிசாலைளையும், 42 சிறிய பாலங்ளையும் இந்த புதிய நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த புதிய நெடுசாலைகளை நரேந்திர மோடி அவர்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.